தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் தேர்தல் அலுவலர்கள் நடத்திவருகின்றனர்.
உலக மகளிர் நாளை முன்னிட்டு சென்னை பூந்தமல்லியில் உள்ள அறிஞர் அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள பிங்க நிற வாக்கு மையத்தில் மாதிரி வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாதிரி வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி அப்போது பணியில் இருந்த தேர்தல் அலுவலர்கள் பிங்க் நிறத்தில் புடவைகள் கட்டியிருந்தனர். பின்னர் அப்பள்ளி மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா உள்ளிட்டவற்றைத் தேர்தல் அலுவலர்கள் வழங்கினர்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பூந்தமல்லியில் குறைவான வாக்குகள் பதிவாகின. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் குறிப்பாக பெண்கள் அதிகளவில் வாக்களிக்க வர வேண்டும் என்பதற்காக, இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக பூந்தமல்லி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ப்ரீத்தி பார்கவி தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'வாக்குச் செலுத்த வருபவர்களுக்கு கையுறை வழங்கப்படும்' - தேர்தல் ஆணையம்