தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயர் நீதிமன்ற வளாகத்தில் பறந்த டிரோன் - பிச்சைக்காரன் 2 படக்குழுவினர் மூவர் கைது! - Pichaikaran 2 news today

பிச்சைக்காரன் 2 திரைப்படத்துக்காக அனுமதியின்றி உயர் நீதிமன்றம் மற்றும் பார் கவுன்சில் வளாகத்தை டிரோன் மூலம் படம் பிடித்த படக்குழுவினர் மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

உயர் நீதிமன்ற வளாகத்தில் பறந்த டிரோன் - பிச்சைக்காரன் 2 படக்குழுவினர் மூவர் கைது!
உயர் நீதிமன்ற வளாகத்தில் பறந்த டிரோன் - பிச்சைக்காரன் 2 படக்குழுவினர் மூவர் கைது!

By

Published : Dec 13, 2022, 11:45 AM IST

Updated : Dec 13, 2022, 11:56 AM IST

சென்னை உயர் நீதிமன்றத்தை, சிலர் டிரோன் கேமரா மூலம் படம் பிடிப்பதாக எஸ்பிளனேடு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் மூன்று பேரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் டிரோன் பறக்கவிட்டது நவீன் குமார், சுரேஷ் மற்றும் ரூபேஷ் என்பது தெரிய வந்துள்ளது.

அதேநேரம் இவர்கள் விஜய் ஆண்டனி நடித்து இயக்கி வரும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் படக்குழுவினர் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் பிச்சைக்காரன் 2 படத்திற்காக சென்னை ரிப்பன் மாளிகை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கட்டடத்தை டிரோன் கேமரா மூலம் படப்பிடிப்பு நடத்த முறையான அனுமதி பெற்றுள்ளனர்.

ஆனால் உயர் நீதிமன்றம் மற்றும் பார் கவுன்சில் வளாகத்தை அனுமதியின்றி டிரோன் கேமரா மூலமாக படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். இவ்வாறு அத்துமீறி டிரோன் கேமராவை பறக்க விட்ட படக்குழுவினர் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்த டிரோன் கேமராவை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்களிடம் எழுதி வாங்கி கொண்டு காவல் நிலைய ஜாமினில் மூவரையும் விடுவித்தனர். மேலும் உயர் நீதிமன்ற வளாகம், தலைமைச் செயலகம், ரயில் நிலையம் போன்ற அரசுக்கு சொந்தமான இடங்களில் அனுமதி பெறாமல் டிரோன் கேமரா மூலம் படப்பிடிப்பு நடத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் துறை தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வயசானாலும் மாறாத ஸ்டைலும் அழகும் - சூப்பர் ஸ்டாரின் கதை

Last Updated : Dec 13, 2022, 11:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details