சென்னை: திருவல்லிக்கேணி நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (56). இவருக்குத் திருமணமாகி ஒரு மகள், மகன் உள்ளனர். பிரபல நியூஸ் ஏஜென்சி நிறுவனத்தில் குமார் புகைப்படக் கலைஞராகவும் மேலாளராகவும் பணிபுரிந்துவந்தார்.
கடந்த ஐந்தாண்டுகளாக குமார் வேலை பார்த்துவந்த நியூஸ் ஏஜென்சி நிறுவனம் சம்பளம் தராமல் அலைக்கழித்துள்ளது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
அவரின் மகளின் திருமணத்திற்குப் பலரிடம் பணம் கேட்டுக் கிடைக்காததால் மேலும் மன அழுத்தத்தில் இருந்துவந்த குமார் நேற்று (பிப்ரவரி 13) இரவு நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில் உள்ள யுஎன்ஐ அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.