சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள சர் தியாகராயா கல்லூரியின் சார்பாக 380ஆவது சென்னை தினம் கொண்டாடப்பட்டது. அதைத்தொடர்ந்து முதுகலை, ஆராய்ச்சி , வரலாற்றுத் துறை மாணவர்கள் ஆகஸ்ட் 19ஆம் தேதி பாரம்பரிய நடை பயணத்தை மேற்கொண்டனர்.
சர் தியாகராயா கல்லூரியில் 380ஆவது சென்னை தின கொண்டாட்டம் - 380-chennai day celebaration
சென்னை: வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள சர் தியாகராயா கல்லூரியின் சார்பாக 380ஆவது சென்னை தினம் கொண்டாடப்பட்டது.
பின்னர், வரலாற்று துறையும், தமிழ்நாடு ஆவணக்காப்பகமும் இணைந்து சென்னையின் வரலாறு என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் ஆகஸ்ட் 20, 21 ஆகிய தேதிகளில் புகைப்பட கண்காட்சியினை நடத்தினார்கள். இதில் கல்லூரி முதல்வர் முனைவர் பா.செந்தில்குமார், தியாகராயா பள்ளி செயலர் முனைவர் டி. ராஜசேகர் ஆகியோர் இணைந்து சென்னை புகைப்பட கண்காட்சியினை தொடக்கி வைத்தார்கள். அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவர்கள், அருகில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் கண்காட்சியினை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.