தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'போன் பே' தொடர்ந்த வழக்கு - 'மொபைல் பே' நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத்தடை நீட்டிப்பு! - கூகுள் ஆப்பிள் நிறுவனங்கள் பதிலளிக்க அவகாசம்

வர்த்தக சின்னம் தொடர்பாக போன் பே நிறுவனம் தொடர்ந்த வழக்கில், 'மொபைல் பே' நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Phonepe
Phonepe

By

Published : Nov 2, 2022, 7:57 PM IST

சென்னை: டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செயலியான போன் பே நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தது. அதில், தங்கள் நிறுவனத்தின் வர்த்தக சின்னத்தைப்போல உள்ளதால் 'மொபைல் பே' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இரு செயலிகளின் வணிக சின்னங்களும், லோகோக்களும் முழுமையாக ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும், சாதாரண பொதுமக்கள் பார்வையில் அவை ஒரே தோற்றத்தில் இருப்பதற்கான முகாந்திரங்கள் உள்ளதாகக்கூறி, மொபைல் பே நிறுவனத்தின் பணப்பரிவர்த்தனை சேவைகளுக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை நவம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை மொபைல் பே நிறுவனத்துக்கு விதிக்கபட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:விசாரணை கைதி விக்னேஷ் வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு தள்ளுபடி

ABOUT THE AUTHOR

...view details