ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் முஃப்தி முகமது சையது. இவரது மகள் ரூபையா செரிஃப் (45). இவருக்கு திருமணமாகி சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது கணவர் வேளச்சேரியில் கார் விற்பனை நிலையம் வைத்துள்ளார். இந்நிலையில், ரூபியா செரிஃப் நேற்று (ஜூலை 28) அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார்.
அந்தப் புகாரில், தனது செல்போனுக்கு அறிமுகமில்லாத மூன்று தொலைபேசி எண்களில் இருந்து வந்த அழைப்பில் அடையாளம் தெரியாத நபர்கள், மூன்று நாள்களாக ஆபாசமாக பேசி தொந்தரவு செய்வதாகவும், இதனுடன் அவர்கள் தொடர்புகொண்ட மூன்று தொலைபேசி எண்ணையும் இணைத்து கொடுத்துள்ளார்.