தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டான்யாவிற்கு 2ஆம் கட்ட அறுவை சிகிச்சை - திமுகவின் சாதனை

முகச்சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமி டான்யாவிற்கு இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சை இன்று (ஜன.5) நடைபெறுகிறது.

Etv Bharatமுக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டான்யாவிற்கு இராண்டாம் கட்ட அறுவை சிகிச்சை தொடக்கம்
Etv Bharatமுக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டான்யாவிற்கு இராண்டாம் கட்ட அறுவை சிகிச்சை தொடக்கம்

By

Published : Jan 5, 2023, 3:10 PM IST

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டான்யாவிற்கு 2ஆம் கட்ட அறுவை சிகிச்சை

சென்னை:திருவள்ளூர் மாவட்டம், மோரை கிராமத்தைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதியின் 9 வயது மகளான டானியாவுக்கு மூன்றரை வயதில் முகத்தில் கரும்புள்ளி தோன்றியது. இதனை சாதாரண ரத்தக்கட்டு என்று சிகிச்சைப் பெற்ற நிலையில், பாதிப்பு குறையவில்லை. ஆறு ஆண்டுகளாக பல மருத்துவமனைகள் ஏறி இறங்கி சிகிச்சைப் பெற்றும் சிறுமியின் ஒருபக்க முகம் சிதையத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரிடம் சமூக வலைதளம் வாயிலாக சிறுமி உதவி கோரியிருந்தார்.

இதன்பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் சிறுமி டான்யாவுக்கு தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து முதலமைச்சர் நேரில் வந்து சந்தித்து, சிறுமி டானியாவிற்கு ஆறுதல் கூறி இருந்தார். முகச்சிதைவு நோயிலிருந்து தன்னைக் காப்பற்றிய தமிழக முதலமைச்சருக்கு சிறுமி மற்றும் பெற்றோர் நன்றி தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் மருத்துவரின் பரிந்துரையின்படி மேலும் சிறுமியின் முகம், வாய், தொண்டை குழாய், பகுதிகள் இயல்பு நிலைக்கு வர தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சை இன்று தண்டலம் சவீதா மருத்துவமனையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அறுவை சிகிச்சை அறைக்குச் செல்லும் சிறுமியை பால்வளத்துறை அமைச்சர் நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்து விரைவில் குணமடைய வாழ்த்தி தைரியம் அளித்து அறுவை சிகிச்சை அறைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த சிறுமி டிஸ்சார்ஜ்; பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்த அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details