இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை 1 பணியில் நேரடி நியமனத்தின் மூலம் 2 ஆயிரத்து 144 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் கம்ப்யூட்டர் மூலம் தேர்வு நடத்தப்பட்டது.
தமிழ், வரலாறு, பொருளியல் முதுகலை ஆசிரியர் பட்டியல் வெளியீடு! - pg teachers result in chennai
சென்னை: முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் தமிழ், வரலாறு மற்றும் பொருளியல் பாடங்களுக்கான தேர்ச்சி பெற்றோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிட எண்ணிக்கையின் அடிப்படையில் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் விபரங்கள் ஒரு பணியிடத்திற்கு இருவர் என்ற வீதத்தில் தேர்வு மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் அழைக்கப்பட்டு 11 மாவட்டங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு 15 பாடங்களுக்கு நவம்பர் மாதம் நடத்தப்பட்டது.
இதில், நவம்பர் 20ஆம் தேதி முதற்கட்டமாக 12 பாடங்களுக்கு தேர்வு பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது தமிழ், வரலாறு, பொருளியல் பாடங்களுக்கு தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டவர்களின் முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளமான www.trb.tn.nic.in வெளியிடப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.