இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் பெறப்பட்டது. அவர்களுக்கான பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு பிப்ரவரி 9,10ஆம் தேதிகளில் அந்தந்த மாவட்டங்களிலுள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் நடைபெறுகிறது.
தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், அரசியல் அறிவியல், மனையியல், உடற்கல்வி இயக்குநர் ஆகிய பணியிடங்களுக்கு 9ஆம் தேதி காலை 10 மணி முதல் நடைபெறும், கணக்கு, இயற்பியல், தாவரவியல், விலங்கியல், உயிர் வேதியல் ஆகிய பாடங்களுக்குப் பத்தாம் தேதி காலை 10 மணி முதல் கலந்தாய்வு நடைபெறும்.