பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”2019- 2020ஆம் கல்வி ஆண்டில் அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் தற்போது காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 2,449 ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்து நிரப்பப்பட வேண்டும்.
முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ10,000 சம்பளத்தில் வேலை இந்தாண்டு பொதுத் தேர்வு எழுதும் பதினோராம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டியுள்ளது.
எனவே 2019 -20 ஆம் கல்வி ஆண்டில் முக்கிய பாடங்களான தமிழ், ஆங்கிலம், உயிரியல், கணிதம், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், வரலாறு, புவியியல் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களில் காலியாக உள்ள 2,449 காலி பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
எனவே ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்து நிரப்பப்படும் வரையில் அந்த ஊரிலோ அல்லது சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் அருகில் உள்ள ஊர்களில் இருந்து முதுகலை பட்டதாரி பணிக்கான தகுதி பெற்றுள்ள நபர்களை பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்து தொகுப்பூதியமாக மாதம் பத்தாயிரம் வழங்கலாம்’ என கூறப்பட்டுள்ளது.