தமிழ்நாடு முழுவதும் இன்று முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு 119 மையங்களில் நடத்தப்பட்டது. இதற்கு 30,833 பேர் இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தனர். ஆசிரியர் தேர்வு வாரியம் இத்தேர்வை முதன்முறையாக கணினி வழியில் நடத்தியது.
கணினி ஆசிரியர் தேர்வில் குளறுபடி; பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு தேதியில் தேர்வு! - redate
சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முதுகலை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாதவர்களுக்கு, வேறு ஒரு நாளில் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
pg-computer-teacher-exam
இந்நிலையில் தேர்வின்போது ஒருசில மையங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிலர் தேர்வு எழுதமுடியாத நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு வேறு நாளில் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் தேர்வு நாள், தேர்வு மையம், குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் தேர்வர்களுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
Last Updated : Jun 23, 2019, 7:16 PM IST