சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியில் ரூ.3 குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும் பெட்ரோல் விலை உயர்விற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
வருவாயை அதிகரிக்க முயற்சி
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், "வருவாயை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.