தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.100ஐ நெருங்கும் பெட்ரோல் விலை! - Petrol price close to Rs 100

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்து லிட்டர் 97.19 ரூபாய்க்கு, டீசல் விலை லிட்டருக்கு 27 காசுகள் அதிகரித்து 91.42 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.100ஐ நெருங்கும் பெட்ரோல் விலை
ரூ.100ஐ நெருங்கும் பெட்ரோல் விலை

By

Published : Jun 11, 2021, 9:54 AM IST

தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் மாதம் வரை தொடர்ந்து உயர்ந்தது. அதன் பின்னர் சற்று குறைந்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.

நேற்று (ஜுன்.10) சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 96.94 ரூபாய்க்கு, டீசல் விலை லிட்டருக்கு 91.15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று (ஜுன்.11) பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்து லிட்டர் 97.19 ரூபாய்க்கு, டீசல் விலை லிட்டருக்கு 27 காசுகள் அதிகரித்து 91.42 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: சோழதேசம் நோக்கி புறப்படுகிறார் ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details