நாடாளுமன்றத்தில் 2019-20ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அப்போது, பட்ஜெட்டில் வரி உயர்வு செய்யப்படும் என்று கூறினார். அதனை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
மத்திய பட்ஜெட் எதிரொலி: பெட்ரோல், டீசல் விலை உயர்வு! - பட்ஜெட் 2019
பட்ஜெட்டில் வரி உயர்வு அதிகரிக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் தாக்கப்பட்டதை அடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
petrol diesel
நேற்றை பெட்ரோல் விலையை விட ரூ. 2.57 காசு உயர்ந்து லிட்டருக்கு 75 ரூபாய் 76 காசாகவும், டீசல் ரூ.2.52 காசு உயர்ந்து லிட்டருக்கு 70 ரூபாய் 48 காசாகவும் உயர்ந்துள்ளது.
உயர்த்தப்பட்ட வரிகளுடன் பிற உள்ளூர் வரிகளும் இணையும் என்பதால் அந்தந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலையில் மாறுபாடு இருக்கும்.