தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சர் வாக்குறுதிப்படி பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் - நிதியமைச்சர் - 3rd day tn assembly

தமிழ்நாட்டின் நிதிநிலை சீரான பிறகு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

முதலமைச்சர் வாக்குறுதிபடி பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் - நிதியமைச்சர்
முதலமைச்சர் வாக்குறுதிபடி பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் - நிதியமைச்சர்

By

Published : Jun 23, 2021, 12:54 PM IST

சென்னை: கலைவாணர் அரங்கில் மூன்றாவது நாளாக சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, 'திமுக தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், ஆளுநர் உரையில் இது தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லை' எனக் கேள்வி எழுப்பினார்.

திமுக ஆட்சியில் குறைக்கப்பட்ட எரிபொருள் மீதான வரி

இதற்குப் பதிலளித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது மூன்று முறை பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்பட்டது.

2014ஆம் ஆண்டு பெட்ரோல் மீதான செஸ் வரி ஒன்பது ரூபாயாக இருந்தது. அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக, பெட்ரோல் மீதான வரியை 28% இருந்து 30%ஆக உயர்த்தியது.

2014ஆம் ஆண்டு பாஜக பொறுப்பில் இருக்கும்போது 9.48 ரூபாயாக இருந்த பெட்ரோல் மீதான செஸ் வரி 21.48 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இன்றைய நிலையில் 4% வரி தான் 31 மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. 96% ஒன்றிய அரசு எடுத்துக்கொள்கிறது.

வரியை முறையாக மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்காத ஒன்றிய அரசு

மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்க வேண்டிய 50 ஆயிரம் கோடி ரூபாய் வரியை ஒன்றிய அரசு கொடுக்கவில்லை, இதனால் மாநிலங்களுக்கு வட்டி சுமை கூடுதலாக உள்ளது.

தமிழ்நாட்டின் தற்போது உள்ள நிதி நிலையைக் கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க முடியாது. நிதிநிலை சீரானதும் முதலமைச்சர் அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: உள்ளாட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் சட்டமசோதா தாக்கல் ஆகிறது!

ABOUT THE AUTHOR

...view details