சென்னை:பன்னாட்டுச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.
இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் இறுதியில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் மே மாதம்வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை அதிகரித்துவருகின்றன.
அதன்படி, சென்னையில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. நேற்று பெட்ரோல் லிட்டர் 101 ரூபாய் 01 காசுக்கும், டீசல் லிட்டர் 96 ரூபாய் 60 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்று (அக். 9) பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து 101 ரூபாய் 27 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து 96 ரூபாய் 93 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க கனிமொழி அறிவுறுத்தல