தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

28 நாட்களாக மாறாத பெட்ரோல், டீசல் விலை... - இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் 28ஆவது நாளாக இன்றும் (மே.4) பெட்ரோல் லிட்டருக்கு 110.85 ரூபாயில் எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்  28 நாட்களாக மாறாத பெட்ரோல், டீசல் விலை... OR 28 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமில்லை... Petrol Diesel Price Unchanged Since 28 Days
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் 28 நாட்களாக மாறாத பெட்ரோல், டீசல் விலை... OR 28 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமில்லை... Petrol Diesel Price Unchanged Since 28 Days

By

Published : May 4, 2022, 7:18 AM IST

சென்னை: சர்வதேச சந்தைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 27 நாள்களாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 110.85 ரூபாய்க்கும், டீசல் விலை 100.94ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 28ஆவது நாளாக இன்றும் (மே 4) விலையில் மாற்றமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மார்ச் 22ஆம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டது. மேலும், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் விலை, கடந்த மே 1 அன்று ரூ.102.50 உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.2,355.50 ஆக உள்ளது. அதன்பின் விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

இதே போல, டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.105.41-க்கும், டீசல் ரூ.96.67-க்கும் விற்பனையாகிறது. மும்பையில் பெட்ரோல் ரூ.120.51-க்கும், டீசல் ரூ.104.77-க்கும் விற்பனையாகிறது. பெங்களூருவில் பெட்ரோல் ரூ.119.09-க்கும், டீசல் ரூ.94.79-க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிங்க: TODAY HOROSCOPE: மே 4 - இன்றைய ராசி பலன்

ABOUT THE AUTHOR

...view details