தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கொடுக்காமல் கத்தியைக் காட்டி மிரட்டல் - petrol bunk cheating

அதிமுக கொடி கட்டிய காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் தராமல் கத்தியைக் காட்டி ஊழியர்களை மிரட்டி தப்பிச் சென்றுள்ளனர்.

பெட்ரோல் போட்டுவிட்டு பணம் தராமல் கத்தியைக் காட்டி மிரட்டல்
பெட்ரோல் போட்டுவிட்டு பணம் தராமல் கத்தியைக் காட்டி மிரட்டல்

By

Published : Jul 23, 2021, 12:09 PM IST

சென்னை: கேகே நகர் நெசப்பாக்கத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் நேற்று (ஜூலை 22) இரவு அதிமுக கொடி கட்டிய இனோவா காரில் நான்கு பேர் பெட்ரோல் போட வந்துள்ளனர்.

பங்க் ஊழியர் பெட்ரோலுக்கு பணம் கேட்டதும், நாங்கள் அதிமுக நிர்வாகிகள் எங்களிடையே பணம் கேட்கிறாயா என்று கூறி ஆபாசமாக பேசி உள்ளனர்.

பெட்ரோல் போட்டுவிட்டு பணம் தராமல் கத்தியைக் காட்டி மிரட்டல்

மேலும் அவர்கள், ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி காரை ஏற்ற முயற்சித்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த எம்ஜிஆர் நகர் காவல்துறையினர் பங்கிலிருந்த சிசிடிவி காட்சிளை வைத்து தப்பிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கட்சி பின்னே நிற்கும் - விஜயபாஸ்கர் விவகாரத்தில் அதிமுக அறிக்கை

ABOUT THE AUTHOR

...view details