தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுச்சேரியில் திடீரென தீ பிடித்து எரிந்த பைக்... உயிர் தப்பிய இளைஞர்... - பைக் தீ பிடித்து எரிந்து நாசம்

புதுச்சேரியில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

பற்றி எரிந்த வாகனம்
பற்றி எரிந்த வாகனம்

By

Published : May 7, 2022, 8:24 PM IST

புதுச்சேரியை சேர்ந்த திருமலை இன்று (மே 7) தனது இருசக்கர வாகனத்தில் சிதம்பரம் நோக்கி சென்றார். இதனிடையே கீழ்பூவானிக்குப்பம் பகுதியில் சாலையில் வாகனத்தை சிறிது நேரம் நிறுத்திவிட்டு, பின்னர் மீண்டும் இயக்கினார். அப்போது, இருசக்கர வாகனத்தில் இருந்து கரும் புகை கிளம்பியுள்ளது. இதனால் திருமலை உடனடியாக வாகனத்தை விட்டு கீழே இறங்கி தூரம் சென்றார். இதையடுத்து வாகனம் தீப்பிடித்து எரிந்தது. முழுவதும் நாசமானது.

பற்றி எரிந்த வாகனம்

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுச்சத்திரம் போலீசார், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது அப்பகுதியில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எரிந்து வரும் நிலையில், தற்போது பெட்ரோல் வாகனம் தீ பிடித்து எரிந்தது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:50 ரூபாய் நோட்டை கீழேப் போட்டு, ரூ.1 லட்சம் திருடிய நூதனம்

ABOUT THE AUTHOR

...view details