தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெட்ரோல், டீசல் விலை 21ஆவது நாளாக இன்றும் (ஏப்ரல் 27-2022) மாற்றம் இல்லை - Petrol and diesel prices remain unchanged today

பெட்ரோல், டீசல் விலையில் 21ஆவது நாளாக இன்றும்(ஏப்.27) மாற்றம் செய்யப்படவில்லை.

பெட்ரோல், டீசல் விலை 21ஆவது நாளாக இன்றும் (ஏப்ரல் 27-2022) மாற்றம் இல்லை
பெட்ரோல், டீசல் விலை 21ஆவது நாளாக இன்றும் (ஏப்ரல் 27-2022) மாற்றம் இல்லை

By

Published : Apr 27, 2022, 8:48 AM IST

சென்னை: பெட்ரோல், டீசல் உள்ளிட்ட விலை தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த இருபத்து ஒரு நாள்களாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும், டீசல் விலை ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 21ஆவது நாளாக இன்றும் (ஏப்.27) விலையில் மாற்றமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மார்ச் 22ஆம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டது. அதன்பின் விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.

இதனிடையே, டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.105.41-க்கும், டீசல் விலை ரூ.96.67-க்கும் விற்பனையாகிறது. மும்பையில் பெட்ரோல் விலை ரூ.120.51-க்கும், டீசல் விலை ரூ.104.77-க்கும் விற்பனையாகிறது. பெங்களூருவில் பெட்ரோல் விலை ரூ.119.09-க்கும், டீசல் விலை ரூ.94.79-க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிங்க:19 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை!

ABOUT THE AUTHOR

...view details