சென்னை: வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு, ரூ.1,000 உடன் பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்டப் பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு கடந்த டிச.22ஆம் தேதி அறிவித்தது. ஆனால், இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு அரசு தரப்பிலும் அமைச்சர்கள் பலர் கரும்பு வழங்கப்படாததற்கான காரணத்தைக் கூறி வருகின்றனர். இந்த நிலையில் கடலூர், மதனகோபாலபுரத்தைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், “பொங்கல் பரிசு தொகுப்புக்காக அரசு, நல்ல விலைக்கு கரும்பை கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டனர். ஆனால், பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாததால், கரும்பை குறைந்த விலைக்கு தனியாருக்கு விற்க வேண்டியுள்ளது.