தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் டி.சி. இளங்கோவன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியைச் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார்.
அம்மனுவில், "மாணவர்கள் இணையவழி வாயிலாகப் பாடங்களைக் கற்பது அவர்களுக்கு முழுமையான நிறைவை அளிக்காது. ஆசிரியர்கள் மூலம் நேரடியாக வகுப்பறையில் கற்பதன் மூலம்தான் மாணவர்கள் பாடங்களை எளிமையாகப் புரிந்துகொண்டு கற்பதற்கும், தேர்வை எதிர்கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும்.