தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பையனூர் திரைப்பட நகர பணிகளை தொடங்க அமைச்சரிடம் மனு! - பையனூர் திரைப்பட நகரம்

பையனூர் திரைப்பட நகர பணிகளை மீண்டும் தொடங்குவது தொடர்பாக வருவாய்துறை அமைச்சரிடம் திரைத்துறையினர் கோரிக்கை மனு அளித்தனர்.

பையனூர் திரைப்பட நகரம் பணிகளை தொடங்க அமைச்சரிடம் மனு!
பையனூர் திரைப்பட நகரம் பணிகளை தொடங்க அமைச்சரிடம் மனு!

By

Published : Jul 12, 2022, 4:26 PM IST

சென்னை:திரைப்படத் தொழிலாளர்களின் நலன் கருதி முன்னாள் முதல்வர் கருணாநிதியால் செங்கல்பட்டு மாவட்டம் பையனூர் கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட 100 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. குடியிருப்புகளுடன் பொது பயன்பாடுகளுக்கு படப்பிடிப்பு அரங்குகளும் அமைக்க திட்டமிடப்பட்டது.

பையனூர் கலைஞர் நகரம் பணிகளை மீண்டும் தொடங்கும் வகையில் மூன்று ஆண்டுகளுக்குள் குடியிருப்புகள் கட்ட வேண்டும் என்ற நிபந்தனையில் தளர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை திரைத்துறையினர் விடுத்து வருகின்றனர்.

இது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுடன் தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ் முருகன், தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராமசாமி, கவுரவ செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் கதிரேசன், பெப்சி தலைவர் ஆர்கே.செல்வமணி, துணைத்தலைவர் செந்தில், பொருளாளர் சுவாமிநாதன், சின்னத்திரை நடிகர் சங்க பொதுச்செயலாளர் போஸ் வெங்கட் உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்தனர்.

இதையும் படிங்க:மொபைல் திரையரங்கில் வெளியாகும் முதல் திரைப்படம் ‘பெஸ்டீ'

ABOUT THE AUTHOR

...view details