தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ - ஜெ.ஜெ. கட்சியின் நிறுவனர் மனு

இந்து மதத்தினரை அவதூறாக பேசியதாக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா மீதான புகாரில் வழக்குப்பதிவு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்து மதத்தினரை அவதூறாக பேசியதாக ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி மனுத்தாக்கல்
இந்து மதத்தினரை அவதூறாக பேசியதாக ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி மனுத்தாக்கல்

By

Published : Oct 13, 2022, 8:00 PM IST

சென்னை:கடந்த செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழா நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா எம்பி இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சை கிளம்பியது.

இந்த விவகாரம் தொடர்பாக ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜெ.ஜெ. கட்சியின் நிறுவனர் ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஆ.ராசாவின் பேச்சு இரு மதத்திற்கு இடையே விரோதத்தை ஏற்படுத்தி, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளதாகவும், ராசாவின் பேச்சால் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கத்தில் இல்லாத மனு நூல் குறித்து பேசி தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திய ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். ஆனால், ஆளும் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பதால் ராசா மீதான புகாரை காவல் துறையினர் ஏற்றுக் கொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க: ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம் - காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details