தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தியை மேலும் நீடிக்க முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு - சென்னை செய்திகள்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என, முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி
ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி

By

Published : Jul 19, 2021, 11:06 PM IST

சென்னை: தூத்துக்குடி மக்கள் சேவையில் உள்ள பல்வேறு கூட்டமைப்புகள் இணைந்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மேலும் ஆறு மாதங்கள் அனுமதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் தனிப்பிரில் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கூறியதாவது: கரோனா இரண்டாவது அலையின் போது ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஆறு மாதங்களுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

அதன்படி வேதாந்தா நிறுவனத்தின் மூலம் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு தென்மாவட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தற்போது மூன்றாவது அலை வரும் என எச்சரிக்கை விடப்பட்டிருப்பாதல், ஆக்சிஜன் தேவையும் அதிகம் இருக்கும். அதனை கருத்தில் கொண்டு, ஸ்டெர்லைட் ஆலையில் மேலும் 6 மாதங்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தியை தொடர்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் தனிப்பிரிவில் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

மேலும், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:'முதலமைச்சர் ஊதிய வாக்குறுதியை நிறைவேற்றணும்' - அரசு மருத்துவர்கள்

ABOUT THE AUTHOR

...view details