தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரேஷன் கடை விற்பனையாளர்கள் நியமனம் - உரிய தேர்வு நடைமுறைகளை பின்பற்றக்கோரி வழக்கு! - சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

நியாய விலைக் கடைகளில் விற்பனையாளர்கள் பதவிகளை உரிய தேர்வு நடைமுறைகளைப் பின்பற்றி நிரப்ப உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

Petition
Petition

By

Published : Dec 23, 2022, 3:39 PM IST

சென்னை: மயிலாடுதுறை மாவட்டம், கோமல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் தேரழந்தூர் நியாய விலைக் கடையில், எந்த தேர்வு நடைமுறைகளும் பின்பற்றாமல், அனிதா என்பவர் விற்பனையாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், "விற்பனையாளர் பணிக்குத் தேவையான கல்வி, வயது தகுதியுடையோர் ஏராளமானோர் உள்ள நிலையில், உரிய தகுதியைப் பெறாத அனிதா என்பவர் எந்த தேர்வு நடைமுறையினையும் பின்பற்றாமல் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புகார் தெரிவித்தபோது, 5 லட்சம் ரூபாய் கொடுத்து இப்பணியை பெற்றதாக அனிதா தெரிவித்தார்.

எனது புகாருக்குப் பதிலளித்த கூட்டுறவுத்துறை அதிகாரிகள், அனிதா என்ற பெயரில் எந்த விற்பனையாளரும் பணியாற்றவில்லை எனத் தெரிவித்தனர். எனவே, நியாய விலைக் கடைகளில் விற்பனையாளர்களை, வெளிப்படையான தேர்வு நடைமுறைகளை பின்பற்றி நியமிக்க உத்தரவிட வேண்டும், அனிதாவை பணியில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: போலீசாருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து

ABOUT THE AUTHOR

...view details