தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தேவேந்திர குல வேளாளர்' அரசாணைக்குத் தடை கோரி மனு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க  உத்தரவு! - ஏழு பிரிவினர்

சென்னை: தமிழ்நாட்டில் ஏழு பிரிவினரை தேவேந்திர குல வேளாளர் என அழைக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Madras Highcourt
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Jun 15, 2021, 5:19 PM IST

தமிழ்நாட்டில் தேவேந்திர குலத்தான், குடும்பன், பள்ளன், கடையன், காலாடி, பண்ணாடி, வாதிரி ஆகிய உட்பிரிவுகளைச் சேர்ந்த மக்களை, தேவேந்திர குல வேளாளர் என, ஒரே பெயரில் அழைக்கும் வகையில், மக்களவையில் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

இதன் அடிப்படையில், ஏழு பிரிவினரையும் தேவேந்திர குல வேளாளர் என கருத வேண்டும் என, அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, ஜூன் 1 ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், உலக வேளாளர் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவில், ஏழு பிரிவினரையும், தேவேந்திர குல வேளாளர் என அழைப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்து அளித்த மனுவை பரிசீலிக்காமல், ஆட்சேபங்களை கேட்காமல் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், இது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்றும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்கப்பட்ட ஏழு பிரிவுகளையும், வேளாளர் என வரலாற்றில் குறிப்பிடப்படவில்லை என்றும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, இம்மனுக்கு மத்திய, மாநில அரசுகள் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

ABOUT THE AUTHOR

...view details