சென்னை: திமுக சார்பில் மார்ச் 7ஆம் தேதி நடைபெற்ற திருச்சி மாநாட்டில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து, தேர்தல் விதிமுறைகளை மீறி உள்ளதாக அதிமுக பிரமுகர் முல்லைவேந்தன், தமிழ்நாடு தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவிடம் தலைமைச் செயலகத்தில் மனு அளித்தார்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேர்தலில் போட்டியிடும் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் ஒருவர் 30 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவிட வேண்டும். ஆனால் தேர்தல் நடத்தை விதிகளை மீறி திருச்சி பொதுக்கூட்டத்தில் பட்டாசு வெடிக்காக ஒரு கோடி ரூபாயும், 25 ஆயிரம் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.