தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு - எடப்பாடி பழனிசாமி

சென்னை வானகரத்தில் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக
அதிமுக

By

Published : Jun 20, 2022, 12:14 PM IST

முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமின் தாக்கல் செய்துள்ள மனுவில், வரும் 23ம் தேதி வானகரத்தில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களாக 2,500 பேர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் இதனால் கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி கடந்த 7ஆம் தேதி டி.ஜி.பி. மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்ததாகவும், அது தொடர்பாக முடிவு எதுவும் எடுக்காததால் மீண்டும் கடந்த 15ஆம் தேதி மனு அளிக்கப்பட்டதாகவும் இதுவரை முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

எனவே வரும் 23ம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்குமாறு டி.ஜி.பி, ஆவடி காவல் ஆணையர் மற்றும் திருவேற்காடு காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதி சதீஷ்குமாரிடம் முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த மனு வரும் புதன்கிழமை (ஜூன் 22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுக ஒற்றை தலைமை - ஈபிஎஸ் ஏக மனதாக தேர்வு செய்யப்படுவார் - பொள்ளாச்சி ஜெயராமன் உறுதி

ABOUT THE AUTHOR

...view details