இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனத் தலைவர் எஸ். இசக்கிமுத்து தாக்கல் செய்துள்ள மனுவில், அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, வகுப்புவாரி இடஒதுக்கீடு மட்டுமே இருக்க வேண்டும் என்றும், சாதிவாரி இடஒதுக்கீடு இருக்கக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2 கோடி மக்கள் தொகை கொண்ட தேவர் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்காமல், அதே அளவு மக்கள் தொகை கொண்ட வன்னியர் சமூகத்திற்கு மட்டும் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
அம்பாசங்கர் ஆணையம் அளித்த தகவலின் அடிப்படையில், 8.5 விழுக்காடு வன்னியர்கள் இருப்பதாக கூறியதே தவறானது என்றும், மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் தொகை அளவை மீறும் வகையில் 10.5% இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டிருப்பது சட்டவிரோதம் என்றும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள மற்ற சாதியினரிடையே பாகுபாடு காட்டுவதாக அமைந்துள்ளதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.