சென்னை:தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சமூக ஆர்வலர் அய்யா என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் உள்ளிட்ட பால் பொருள்கள் விற்பனை நிறுவனங்கள் பால் மற்றும் பால் சம்மந்தபட்ட பொருள்களை பிளாஸ்டி பைகளில் விற்பனை செய்து வருகிறது. இந்த பிளாஸ்டிக் பைகள் மக்கும் தன்மை அற்றவையாக உள்ளது. மேலும், இதுபோன்ற பிளாஸ்டிக் பைகளை பொதுமக்கள் முறையாக கையாள்வதில்லை. இதற்கான மறுசுழற்சி செய்வதற்கான போதுமான வசதிகளும் இல்லை.
பிளாஸ்டிக் கழிவு மேலாண்மைக்கு உள்ளாட்சி அமைப்புகள் போதுமான வசதிகளும் இல்லை. பிளாட்டிக் பொருள்களை பூமியில் வீசுவதால் மண் மாசுபடுகிறது. இதனால், மனிதர்கள் மற்றும் விலங்குகள் பாதிக்கின்றது. இந்தியாவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தான் அதிகளவு பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தியாகும் இடமாகவும், பயன்படுத்தும் இடமாகவும் உள்ளது. ஆவின் உள்ளிட்ட பால் நிறுவனங்கள் மொத்த பிளாஸ்டிக்கில் தேவையில் 7 விழுக்காடு பெற்றுள்ளது.
ஆவின் நிறுவனமும் பிளாஸ்டிக் மறுசுழற்சிகள் செய்வதில்லை. இந்த விவகாரத்தில் ஆவின் நிறுவனம் தோல்வி அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை உத்தரவை மறுஆய்வு செய்ய கோரிய சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக கண்ணாடி பாட்டில்களில் பால் விற்பனை செய்ய பரிசீலிக்க நீதிமன்றம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.