தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வானதி சீனிவாசன் வெற்றியில் சந்தேகம்: மறு வாக்குப்பதிவு நடத்தக்கோரி மனு! - கோவையில் மறு வாக்குப்பதிவு நடந்தக் கோரி மனு

கோயம்புத்தூர்: கோவை தெற்குத் தொகுதியில் போட்டிபோட்ட வானதி சீனிவாசன் வெற்றிபெற்றது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், மறு வாக்குப்பதிவு நடத்தக் கோரியும் இந்துஸ்தான் ஜனதா கட்சியின் தென் மண்டலத் தலைவரான கே.ராகுல் காந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

Petition for urge recounting in coimbatore south constituency,
Petition for urge recounting in coimbatore south constituency,

By

Published : May 14, 2021, 4:42 PM IST

கோயம்புத்தூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட இந்துஸ்தான் ஜனதா கட்சியின் தென் மண்டலத் தலைவரான கே.ராகுல் காந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், ’தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு 53 ஆயிரத்து 209 வாக்குகள் பெற்ற வானதி சீனிவாசன் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டது. தனக்கு 73 வாக்குகள் மட்டுமே பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

தேர்தலுக்கு முன்பாக வானதி சீனிவாசனுக்கு எதிராக தொகுதியில் எதிர்ப்பலை நிலவிய சூழலில், அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது சந்தேகத்தை எழுப்புகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ததன் மூலம் தான் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றுள்ளார்.

அதனால், மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டுமென மே 3ஆம் தேதியே தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, தனது மனுவைப் பரிசீலித்து, மறுவாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details