சென்னை:போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கு பயிற்சி அளிக்கும் மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ் - ஐபிஎஸ் போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான வினாத்தாள்களில், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கேள்விகள் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது இந்தி மொழி தெரிந்தவர்களுக்கு சாதகமாக இருப்பதாகவும், மற்ற மாநில மொழிகளில் புலமை பெற்றவர்களுக்கு பாரபட்சமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார். சிவில் சர்வீசஸ் தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்துவதால், வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு மறைமுகமாக மறுக்கப்படுவதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.