தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேதா இல்ல அவசரச் சட்டம் ரத்து செய்யக்கோரிய வழக்கு: ஆளுநரின் செயலர் பதிலளிக்க உத்தரவு - poes garden case

http://10.10.50.85//tamil-nadu/16-September-2020/tn-che-05-vedhanilayam-script-7204624_16092020153910_1609f_1600250950_122.jpeg
http://10.10.50.85//tamil-nadu/16-September-2020/tn-che-05-vedhanilayam-script-7204624_16092020153910_1609f_1600250950_122.jpeg

By

Published : Sep 16, 2020, 3:00 PM IST

Updated : Sep 16, 2020, 4:08 PM IST

14:55 September 16

சென்னை: வேதா நிலையத்தை அரசுடைமையாக்கும் அவரசச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தீபக் தொடர்ந்த வழக்கில் ஆளுநரின் செயலர், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை செயலர், இயக்குநர், சட்ட துறை செயலர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலைய இல்லத்தை அரசுடைமையாக்கி பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், வேதா நிலையம் அமைந்துள்ள நிலம் தனது பாட்டி சந்தியாவால் வாங்கப்பட்டது. தன்னுடைய சகோதரி தீபாவுடன் வேதா நிலையத்தில் சிறு வயதில் வளர்ந்தேன். பாட்டி சந்தியா மரணத்துக்கு பின் வேதா நிலையத்தில் வசித்து வந்த தனது அத்தை ஜெயலலிதா பல்வேறு முக்கிய குடும்ப நிகழ்ச்சிகளை அங்கு நடத்தி வந்தார்.

இதனிடையே, ஜெயலலிதா இறந்த பின்னர், தங்களை வாரிசுகளாக அறிவிக்கக் கோரி தானும், சகோதரி தீபாவும் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், வேதா நிலையத்தையும், அங்கு உள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடைமையாக்க அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பிக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை. ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள் குறித்த உண்மை நிலையை தெரிந்து கொள்ளாமல் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, வேதா நிலையத்தை அரசுடைமையாக்கப்பட்டு பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும். நினைவில்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆளுநரின் செயலர், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை செயலர், இயக்குநர், சட்டத் துறை செயலர் ஆகியோர் ஆறு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

Last Updated : Sep 16, 2020, 4:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details