தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநில விளையாட்டுப் போட்டிகளை புறக்கணிப்போம்: உடற்கல்வி ஆசிரியர்கள் எச்சரிக்கை! - WARNING PT TECHERS

சென்னை: தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் சங்கர் பெருமாள் தலைமையில் நடைபெற்றது.

PROTEST

By

Published : Aug 5, 2019, 5:17 AM IST

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநிலத் தலைவர் சங்கர் பெருமாள் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

  • நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
  • அரசாணை 177 படி உடற்கல்வியில் அனைத்து உயர் கல்விக்கும் இரண்டு ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
  • அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.
  • அனைத்து நடுநிலைப் பள்ளிகளுக்கும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும்.
  • அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களையும், மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.
    தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம்

மேலும், இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கள் சங்கத்தின் சார்பில் அனைத்து மாவட்டத்திலும் அக்டோபர் முதல் வாரத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், தங்கள் கோரிக்கைகளை அக்டோபர் மாதத்திற்குள் நிறைவேற்றாவிட்டால் மாநில விளையாட்டுப் போட்டிகளை புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளோம் எனவும் சங்கர் பெருமாள் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details