சென்னை: பாரிமுனை புட்டுசாஹிப் தெருவில் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கிவருகிறது. இந்த நிறுவனத்தில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமசாமி (43), திருவள்ளூரைச் சேர்ந்த ஜெகதீசன் (43) ஆகியோர் கடந்த 10 ஆண்டுகளாக ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் உணவகப் பொருள்களுக்குப் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கும் பணியைச் செய்துவந்துள்ளனர்.
அதன்படி நேற்று (டிசம்பர் 21) மதியம் துறைமுகத்தில் சோளத்தை கப்பல் மூலமாக வியட்நாம் நாட்டிற்கு கொண்டுசெல்லும் பணிகள் நடைபெற்றன. அப்போது ராமசாமி, ஜெகதீசன் ஆகியோர் சோளத்தில் பூச்சி பிடிக்காமல் இருக்க கப்பலுக்குள் சென்று பூச்சிக்கொல்லி மருந்து தெளித்துவந்தனர்.