சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் அதன் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை சந்தித்து தங்களுக்குரிய தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் கோரிக்கை வைத்தார்.
பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் வேண்டும் - perunthalaivar makkal katchi demand admk
அதிமுக கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தலில் ஒப்புக்கொண்டது போல் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு மூன்று தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளதாக அதன் தலைவர் என ஆர்.தனபாலன் தெரிவித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாடாளுமன்றத் தேர்தலின்போது, அதிமுக கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி இணைந்து செயல்பட்டோம். அப்போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்று தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ளோம்.
இதற்காக 10 மாவட்டங்களில் நாங்கள் நிற்க விரும்பும் பகுதிகளை குறிப்பிட்டு அளித்துள்ளோம். எங்கள் வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவும் தயாராக உள்ளோம். பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு சிறப்பாக செயல்படுத்தி உள்ளது. எனவே வரும் தேர்தலில் வெற்றி பெறும் என்பது உறுதியாகியுள்ளது" என்றார்.
TAGGED:
perunthalaivar makkal katchi