சென்னை: தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த மசோதாவை பேரவையில் தாக்கல் செய்து பேசிய அவர் “1982 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ் பல்கலைக்கழக சட்டத்தின்படி, பல்கலைகழகத்தின் அதிகார அமைப்புகளில், காது கேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களை உறுப்பினர்களாக நியமிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்தச் சட்டம் தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களை பாகுபடுத்துகிறது என்றும் சட்ட உரிமைகளை மீறுவதாகவும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் கூறியுள்ளார்.
எனவே, 1982ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தை நீக்கி, தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளை, தமிழ் பல்கலைக்கழக நிர்வாக அமைப்புகளில் உறுப்பினராக நியமிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்படுவதாக” அதில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
தமிழ் பல்கலைக்கழகத்தில் அதிகார அமைப்புகளின் உறுப்பினர்களாக மாற்றுத்திறனாளிகள் - சட்ட திருத்த மசோதா தாக்கல்
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக அதிகார அமைப்புகளின் உறுப்பினர்களாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழு நோயாளிகளையும் நியமிப்பதற்கு வகை செய்யும் சட்ட திருத்த மசோதா சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ் பல்கலைக்கழகத்தில் அதிகார அமைப்புகளின் உறுப்பினர்களாக மாற்றுத்திறனாளிகள் - சட்ட திருத்த மசோதா தாக்கல்