தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓடும் ரயிலில் குற்றங்கள் - பயணிகளை அலைக்கழிக்கக் கூடாது என அறிவுரை..!

ரயில்களில் பொருட்களை இழந்த நபர்கள் எந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும் உடனடியாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் அலைக்கழிக்க வைக்க கூடாது என டிஜிபி சைலேந்திர பாபு கூறினார்

ரயில் பயணத்தில் பொருட்களை இழந்த நபரை புகார் கொடுக்க அலைக்கழிக்க கூடாது
ரயில் பயணத்தில் பொருட்களை இழந்த நபரை புகார் கொடுக்க அலைக்கழிக்க கூடாது

By

Published : Oct 12, 2022, 7:48 PM IST

ரயில் பயணிகளிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னை பெரம்பூர் ரயில்வே திருமண மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

கடந்த மே மாதம் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் செயின் பறிப்பு, திருட்டு வழக்குகளில் மீட்கப்பட்ட திருச்சி சரகத்தில் 172 சவரன் மற்றும் சென்னை சரகத்தில் 21 சவரன் என ரூ.96 லட்சம் மதிப்புள்ள 193 சவரன் தங்க நகைகளும், ரூ.7.50 லட்சம் மகிப்புள்ள 156 செல்போன்களும், ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 6 லேப்டாப்கள் மற்றும் ரூ.28 ஆயிரம் பணம் உட்பட ரூ 1 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு ரயில்வே காவல்துறை கூடுதல் இயக்குனர் வனிதா, ரயில்வே காவல்துறை துணை தலைவர் அபிஷேக் திக்‌ஷித், ரயில்வே கண்காணிப்பாளர் உமா, அதிவீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து பயணிகளின் உடைமைகளை மீட்க உதவியாக இருந்த போலீசாரை பாராட்டி அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதிகள் வழங்கப்பட்டன.

கடந்த மே 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையில் ரயில்வே போலீசார் சார்பில் 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 739 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 61 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மேலும் ரயில்வே போலீசார் சார்பில் இதுவரை 14115 கிலோ ரேசன் அரிசி 1588.144 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 690 லிட்டர் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ரயில் நிலையங்களில் சுற்றித்திரிந்த 1060 சிறார்கள் மீட்கப்பட்டு 39 பேர் பெற்றோரிடமும், 1021 சிறுவர்கள் காப்பகத்திலும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களிடம் விழிப்புணர்வை கொண்டு செல்லும் நோக்கில் 33,100 விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாள பகுதிகள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் பொதுமக்களுக்காக நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, ரயில் குற்றங்கள் பாதியளவு குறைந்திருப்பதாகவும், பாக்தாத் மற்றும் பவாரியா போன்ற கொள்ளையர்கள் உள் நுழையாத படி ரயில்வே போலீசார் சிறப்பாக செயல்பட்டு கடந்தாண்டு ஒரு ரயில் கொள்ளை சம்பவங்கள் நடைபெறவில்லை என அவர் கூறினார். தமிழக எல்லைகளான ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதியில் தீவிரமாக வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மூன்று மாதத்தில் 1700 கிலோ கஞ்சாவை ரயில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மோப்ப நாய்கள் உதவியோடு கஞ்சா வேட்டை நடந்து கொண்டிருக்கிறது. போதை பொருள் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும் போதைப் பொருட்கள் வழக்கில் குற்றவாளிகளை கைது செய்வதோடு மட்டுமல்லாமல், இப்போது முதல் முறையாக அவங்களுடைய வங்கி கணக்கு மற்றும் சொத்துக்களை முடக்கும் பணிகளை செய்து வருகிறோம்.

ரயில் பயணத்தில் பொருட்களை இழந்த நபரை புகார் கொடுக்க அலைக்கழிக்க கூடாது

பல வருடங்களாக பிடியாணையில் தலைமறைவாக உள்ள ரவுடிகளை பிடித்து வருகிறோம். இதுவரை 300க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்துள்ளதாக தெரிவித்தார்.

பின்னர் மேடையில் பேசிய சைலேந்திரபாபு, ரயில்களில் பொருட்களை பறிகொடுத்த நபர் புகார் கொடுத்தால் உடனடியாக ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மீட்க வேண்டும். அதைவிட்டு பறிகொடுத்த இடத்தில் புகார் கொடுக்க வேண்டும் என அலைக்கழிக்க வைக்க கூடாது என கூறினார். மேலும் தமிழக காவல்துறைக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்ததில் ரயில்வே போலீசாருக்கு முக்கிய பங்கு இருப்பதாக அவர் கூறினார்.

இதையும் படிங்க: மசாஜ் சென்டர் பெண் ஊழியரிடம் நகை பறித்த இளைஞர் கைது

ABOUT THE AUTHOR

...view details