சென்னை முகப்பேர் பகுதியில் வசித்துவருபவர் பரிமளா(45). இவருக்கு கடந்த மாதம் 16ஆம் தேதி விபத்தில் கால் எலும்பு முறிவு ஏற்பட்ட உடனே சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். இவருக்கு உதவியாக முகப்பேரை சேர்ந்த ஸ்டாலின்(49) மருத்துவமனையில் தங்கி வந்துள்ளார்.
நேற்று இரவு(அக்.05) வழக்கம் போல் ஸ்டாலின் பரிமளாவிற்கு தேவையான உணவுகளை வாங்கி கொடுத்துவிட்டு நியூ டவர் நான்காவது மாடியில் உள்ள லிப்ட் அருகே படுத்து உறங்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று(அக்.06) காலை 8 மணிவரை ஸ்டாலின் அங்கேயே படுத்திருந்ததால் பணியில் இருந்த காவலாளி ஸ்டாலினை சோதித்து பார்த்துள்ளனர். அப்போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் ஸ்டாலின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஸ்டாலின் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:சென்னை காசிமேட்டில் மீனவர் படுகொலை: காவல் துறை விசாரணை