சென்னை சூளை, பட்டாளம் பகுதிகளைச் சேர்ந்த சாந்த குமார் (19), பாலாஜி (19) ஆகிய இருவரும் கிண்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள சுபாஷ் சந்திர போஸ் சிலை அருகே அதிவேகமாக வந்த அவர்களது வாகனம் விபத்திற்குள்ளானது.
இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் சாவு! - வாகன விபத்து
சென்னை: மெரினா கடற்கரை சாலையில் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் ஒன்று விபத்திற்குள்ளானதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் சாந்தகுமார் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த பாலாஜி உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தை பேருந்து இடித்துவிட்டு நிற்காமல் சென்றதாக சாந்த குமார், பாலாஜி ஆகியோரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் இருவரும் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததே விபத்திற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளைக் கொண்டு விபத்திற்கான காரணம் குறித்து மெரினா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த விபத்தால் ஒருமணி நேரமாக மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.