சென்னை:தமிழ்நாடு முழுவதும் 19ஆம் தேதியுடன் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும், சுகாதாரத் துறை அலுவலர்கள், தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்களுடன் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
ஒன்பதாவது முறையாகத் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், திரையரங்குகள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவற்றைத் திறப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல, தொற்று எண்ணிக்கை அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாகவும், இனி எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.