சென்னை:கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பா.சுப்பராயன், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆகியோருக்கு சென்னையில் சிலை வைக்கப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் செய்தித்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது.
இதன்படி ராணி மேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூர் சிலை அமைக்கவும், காந்தி மண்டபத்தில் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பா. சுப்பராயன் சிலை அமைக்கவும், அண்ணா பல்கலைக்கழகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிலை அமைக்கவும் அனுமதி அளிக்கக்கோரி செய்தி மக்கள் தொடர்புதுறை துணைச் செயலாளர் சார்பில் சென்னை மாநகராட்சிக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது.