தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

CBSE: 'இந்தியா திரும்பும் மாணவர்களை முன் அனுமதியின்றி பள்ளியில் சேர்க்க அனுமதி'

வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பும் மாணவர்களை முன் அனுமதியின்றி CBSE(CENTRAL BOARD OF SECONDARY EDUCATION) பள்ளியில் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ
சிபிஎஸ்இ

By

Published : Nov 25, 2021, 9:03 PM IST

சென்னை: உலக நாடுகள் அனைத்தும் கரோனாவால் பொருளாதாரப் பாதிப்பினை அடைந்துள்ளன. இதனால் பல வெளிநாட்டு பணியாளர்களின் வேலை பாதிக்கப்பட்டு தாயகம் திரும்பி வருகின்றனர்.

இதே போன்று இந்தியா திரும்புபவர்களின் குழந்தைகள் உலகத் தரத்திலான பள்ளிகளில் சேர காலதாமதம் ஏற்படுவதால் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பும் மாணவர்களுக்காக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE - CENTRAL BOARD OF SECONDARY EDUCATION) அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதில், 'வெளிநாட்டுப் பள்ளிகளில் படித்து இந்தியா திரும்பும் மாணவர்களுக்கு உடனடியாக அட்மிஷன் வழங்கலாம். வெளிநாட்டுப்பாடத்திட்டத்திற்கு நிகரான சிபிஎஸ்இ பாடத்திட்ட விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தற்போது சிபிஎஸ்இயின் முன் அனுமதியின்றி, வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டுக்குத் திரும்பும் மாணவர்களை சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்க்கலாம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

ABOUT THE AUTHOR

...view details