சென்னை:கரோனா பரவல் காரணமாக, விற்பனையாகாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மலேசிய மணலை விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.
கட்டுமானப் பணிகளுக்கான தமிழ்நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக, வெளிநாடு மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சென்னை காமராஜர் துறைமுகம், அதானி காட்டுப்பள்ளி துறைமுகம், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் உள்ளிட்ட 3 துறைமுகங்கள் வாயிலாக 5 லட்சம் மெட்ரிக் டன் அளவில் மணல், 2 ஆண்டுகளாக இறங்குமதி செய்யப்பட்டு வந்தது.