தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருணாநிதி நினைவிடம் அமைக்க கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி

மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிடம் அமைக்க சில நிபந்தனைகளுடன் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

கருணாநிதி நினைவிடம்
கருணாநிதி நினைவிடம்

By

Published : Jan 12, 2022, 6:22 PM IST

சென்னை: மெரினா கடற்கரையில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கட்டப்படவுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்திற்குக் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2011இன் படி கடற்கரையோரம் அமைக்கப்படும் கட்டுமானங்களுக்கு முன் அனுமதி பெறுதல் அவசியம். அரசு அறிவித்ததன் படி கருணாநிதி நினைவிடம் அமைக்கும் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கருணாநிதி நினைவிடத்திற்கு CRZ அனுமதி கோரி பொதுப்பணித்துறை விண்ணப்பித்திருந்த நிலையில், சென்னை மாவட்ட கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் சில நிபந்தனைகளுடன் மாநில அளவிலான ஆணையத்திற்குத் திட்டத்தைப் பரிந்துரை செய்திருந்தது.

பரிந்துரையை ஏற்ற மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் கருணாநிதி நினைவிடம் அமைக்க சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. முதற்கட்டமாக 2 பெவிலியன், 2 கேலரிகள், 4 நீர் குளங்கள், கியாஸ் பம்ப் அறை, கழிப்பறை என ஏற்கனவே அனுமதி பெறப்பட்ட 160 செண்ட் பரப்பளவில்அமைக்க அனுமதி வழங்கியுள்ளது.

வடகிழக்கு பகுதியில் 40 செண்ட் பரப்பளவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள சுற்றுச்சுவர், திறந்த வெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம் அமைப்பதற்கான கூடுதல் தரவுகளை மாநில ஆணையம், பொதுப்பணித்துறையிடம் கோரியுள்ளது. விரைவில் அந்த அனுமதியும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:அஞ்சாத சிங்கம் என் காளை... அது பஞ்சா பறக்கவிடும் ஆளை- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஒரு பார்வை!

ABOUT THE AUTHOR

...view details