சென்னை: தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையொட்டி அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் கரோனா 3ஆவது அலை வேகமாக பரவ தொடங்கியுள்ள நிலையில், அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
பொங்கல் பண்டிகையன்று தனியார் கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள் உள்ளிட்டவை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.