தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையின் முதல் மலர் கண்காட்சி... உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைப்பு..! - சென்னை மலர் கண்காட்சி இடம்

சென்னையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மலர் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை மலர் கண்காட்சிக்கான அனுமதி மூன்றே மூன்று நாட்கள் தான்!
சென்னை மலர் கண்காட்சிக்கான அனுமதி மூன்றே மூன்று நாட்கள் தான்!

By

Published : Jun 3, 2022, 4:46 PM IST

Updated : Jun 3, 2022, 6:26 PM IST

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில்முதன்முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி இன்று (ஜூன் 3) தொடங்கப்பட்டுள்ளது. கலைவாணர் அரங்கத்தில் அமைக்கபட்டுள்ள இந்த மலர்க்கண்காட்சியை, சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்போது வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனிருந்தனர்.

இதில் மலர்களால் ஆன பேருந்து, இருக்கைகள், தேர் மற்றும் நறுமணப்பொருட்களான கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றால் செய்யப்பட்டுள்ள மாடு மற்றும் விவசாயிகள் உருவம் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

சென்னை மலர் கண்காட்சிக்கான அனுமதி மூன்றே மூன்று நாட்கள் தான்!

இந்த கண்காட்சி இன்று முதல் மூன்று நாட்களுக்கு மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடக்கும். பெரியவர்களுக்கு 50 ரூபாயும், மாணவர்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகையும் வழங்கி நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:உலக பிரசித்தி பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி: மனைவியுடன் சென்று தொடங்கி வைத்த ஸ்டாலின்

Last Updated : Jun 3, 2022, 6:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details