தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேவலாயங்களில் அப்பம், புனித நீர் தனித்தனி கோப்பைகளில் வழங்க அனுமதி! - tamailnadu govt announcement

தமிழ்நாட்டில், கிறிஸ்தவ தேவாலயங்களில் நற்கருணை எனப்படும் அப்பங்களை, நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

கிறிஸ்துமஸ் அப்பத்திற்கு அனுமதி
தேவலாயங்களில் அப்பம், புனித நீர் தனித்தனி கோப்பைகளில் வழங்க அனுமதி

By

Published : Dec 2, 2020, 9:15 PM IST

சென்னை: தமிழ்நாட்டில், கிறிஸ்தவ தேவாலயங்களில் நற்கருணை எனப்படும் அப்பங்களை, நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கலாம் என்று தமிழ்நாடுஅரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தலைமைச் செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், " கரோனா தொற்று காரணமாக கிறிஸ்தவ மத இடங்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களில், நற்கருணை, புனித நீரைத் தூவுவது உட்பட உடல் ரீதியான தொடர்புகளை உள்ளடக்கிய அனைத்து மத நடைமுறைகளும் தவிர்க்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதால், வழிபாட்டின் மிக முக்கியமான பகுதியாக இருக்கும் நற்கருணை புனித ஒற்றுமை அனுமதிக்கப்படலாம் என்று குறிப்பிடப்படுகிறது. மேலும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களையொட்டி நடைபெறும்
திருப்பலிகளில் பங்கேற்போர் மீது, புனித நீர் தெளிக்கவும், அப்பங்களை தனித்தனி கோப்பைகளில் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தமிழ்நாடு அரசு அனுமதிக்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:டிசம்பர் மாதத்தில் வலம் வரப்போகும் பனங்கொட்டை கிறிஸ்துமஸ் தாத்தா!

ABOUT THE AUTHOR

...view details