சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை வரலாறு ( எம்.ஏ.வரலாறு ) பாடப்பிரிவிற்கு நடத்தப்பட்ட இரண்டாவது பருவநிலைத்தேர்வில் சாதியைக் குறித்து கேள்வி கேட்கப்பட்டது தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள விசாரணைக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணையில், ’பெரியார் பல்கலைக்கழகம் முதுநிலை வரலாறு (எம்.ஏ.வரலாறு ) பாடப்பிரிவிற்கு நடத்தப்பட்ட இரண்டாவது பருவநிலை தேர்வு வினாத்தாளில் சாதியைக் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உயர் கல்வித்துறை அரசு இணைச் செயலாளர் ம. இளங்கோ ஹென்றி தாஸ் என்பவரது தலைமையில் கீழ்க்கண்டவாறு விசாரணைக்குழுவினை அமைத்து அரசு ஆணையிடுகிறது.
தலைவர் -ம.இளங்கோ ஹென்றி தாஸ் , அரசு இணைச் செயலாளர் உயர்கல்வித் துறை;
விசாரணை அலுவலர்கள் -ப.தனசேகர் அரசு துணைச் செயலாளர், உயர்கல்வித் துறை; B.S. விஜயலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் / திட்ட மேலாளர் (RUSA), ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.